
கடந்த மார்கழி மாதம் பகல்பத்து உற்சவம்..! அண்ணா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அர்ச்சுன மண்டபத்தில், நம்பெருமாளை ஸேவித்து விட்டு தம் அகத்தில் அமர்ந்திருந்தார்..! அடியேன் அண்ணாவினை நமஸ்கரித்தேன்..! அண்ணா அப்போது சொன்னது, ”ரங்க ராஜன் – அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார், ஆச்சார்யர்கள் புடைசூழ, எப்படி கோலகலமாக உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது..! எவ்வளவு கலாப்ங்களை (கலாபம் – கலகங்கள்/நெருக்கடிகள்) சந்தித்திருப்பான..! ராஜாதி ராஜன்…! என்று சிலாகித்து சிறிது நேரம் அவனது சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்..!
அன்று அவருடன் அளவளாவிய பாக்கியத்தினை, இன்று அடியேன் அசை போடும் போது.. அவரது ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் அவர் எழுதியது நினைவுக்கு வந்தது..! அதனை அப்படியே….! தாங்கள் அனைவரும் அனுபவிப்பதற்காக…!
”…உலகத்துக்கெல்லாம் ஆதாரம். – பெரியகோயில்.
சப்த பிராகாரங்கள் – விமானங்கள் – மண்டபங்கள் -கற்கோவில்கள் – போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு ராஜாக்களும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர், இன்று ராஜகோபுரம் கட்டின ஸ்வாமி உள்பட..!
எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஏதோ ஒரு பிரேரணை செய்கிறார்கள் — நடக்கிறது..!
ஏராளமான சொத்துக்கள் எழுதி வைக்கின்றார்கள்…! ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்..! நித்யோத்ஸவங்கள், பக்ஷ உத்ஸவங்கள், மாஸ உத்ஸவங்கள் நடைபெறுகின்றது..!
மிலேச்சர்கள், நாஸ்திகர்கள் உள்பட மனசு மாறியிருக்கிறார்கள்..!
”ஏ தே ர் ஒ ரு ர ஹ ஸ் ய ம் இ ரு க் கி ற து..!”
எவ்வளவு ஆழ்வார்கள், பிரம்ம நிஷ்டர்கள், ஆச்சார்யர்கள், எப்பேர்பட்ட ஆச்சார்யர்கள், தாசர்கள், ஸம்பிரதாய பேதம் இல்லாமல் எல்லோரும் ஈடுபட்டிருக்கிறார்கள்..!
சங்கரர், இராமனுஜர், மத்வர், மற்றும் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், ஸ்ரீவல்லபர் முதலிய வடதேசத்து மஹான்களும் வந்து இங்கே மண்டிக் கிடந்திருக்கிறார்கள்..! மகான் என்று பாரத தேசத்தில் ஒருவர் இருந்தால், அவர் ஸ்ரீரங்கத்திற்கு வராமல் இருக்க மாட்டார்..!
”அ வ் வ ள வு பே ர் க ளு க் கு ம் ஒ ரு ஆ க ர் ஷ ண ம்”
அவ்வளவு தாசர்களும், தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று எவ்வளவு கீர்த்தனைகள் சமர்ப்பித்திருக்கிறார்கள்..! எவ்வளவு ராஜாக்களை ஸ்ரீரங்கநாதன் பார்த்தவர்..! மாலிக்காபூர் போன்ற முஸ்லீம் ராஜாக்கள் கோவில்களைக் கைப்பற்றி பூட்;டி வைத்து, பிறகு முடியாமல் ஓடியதையும் பார்த்தார்..! இவ்வளவுக்குப் பிறகும் இன்னமும் தீபம் எரிகின்றது..! உத்ஸவங்கள் பண்ணிக்கொண்டு நம்பெருமாள் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்..! எல்லாம் அவரது சாம்ராஜ்யத்தாலும், அகடிதகடனா லீலைகளாலும்தான்..! ராமனாக, கிருஷ்ணனாக வந்தது ஆச்சார்யமில்லை..! விபவாவதாரமாக இருந்து கொண்டு உத்ஸவங்களைப் பண்ணிக்கொண்டு நம்பெருமாள வருவதையும், பேசுவதையும், பார்ப்பவர்களுக்கு ஒரு விக்ரஹமாகவேத் தோணாது..!
- ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்



