சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகசாமிக்கு காழ்ப்பு ஏன்?!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி
arumugasamy commission - 2026

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு தேவையில்லை என்று கூறியிருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.

மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த மரணத்தில் மர்மம் இருந்தால் வேறு மருத்துவர்கள் தான் அதை கண்டுபிடிக்க முடியும் என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விஷயம்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் 2012 முதல் ஏன் ஒரே பதவியில் இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி.

வழக்கு விசாரணை வரம்பு நீதிபதிகளுக்கே மாறும்போது
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் 2012 முதல் ஏன் ஒரே பதவியில் இருக்கிறார் என்று கேள்வியையும் தன் ஆணையில் எழுப்பி இருக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி.

இது விசாரணை கமிஷன் வரம்புக்கு உட்பட்ட கேள்வியா?

ஜெயலலிதா மரணம் அடைந்தது 2016 டிசம்பர். ராதாகிருஷ்ணன் 2012ல் அந்த பதவியில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் மீது கமிஷனுக்கு ஏன் காழ்ப்பு?

எதை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது என்பதைக்கூட ஆணையத்தின் தலைவர் மறந்துவிட்டாரா?

மருத்துவக் குழுவை நிராகரித்து 26 பக்க இடைக்கால ஆணை பிறப்பிக்கிறார் ஆறுமுகசாமி! இதுவரை விசாரித்தவற்றைத் தொகுத்து இடைக்கால “பிராக்ரஸ் ரிப்போர்ட்” ஒன்றை ஏன் அவர் கொடுக்கக் கூடாது?

ஜனநாயகத்தின் ஆணிவேர் வெளிப்படைத்தன்மை. ஆணையம் மக்களை அப்டேட் செய்யலாமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.