திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி

Published:

thiruppavai 13 - 2026

நண்ணாள் – நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை “தீர்த்தம் தாரும்” என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்” என்றருளிச் செய்தார்!

கூரத்தாழ்வானின் தேவியார் கூரத்தாண்டாள். திருஅத்தியயன உத்ஸவத்தில் ( இராப்பத்து , பகல் பத்து மஹோத்ஸவம்) ஊடே வரும் ஏகாதஸி அன்று உபவாசம் இருந்து அடுத்த நாள் பட்டரிடம் பெருமாள் தீர்த்தம் கேட்க….

அவர் இப்பேர்பட்ட பெரிய திருவத்தியன உத்ஸவம் கோலாஹலமாக நடந்து கொண்டிருக்கையில், இந்த ஏகாதசியை நினைவில் வைத்து அனுஷ்டித்தீரே என்றாராம்.

அதாவது, பகவத் கைங்கர்யம், பகவத் அனுபவம் செல்கையில் சாமானிய தருமத்தை விட எம்பெருமானான விசேஷ தருமம் , பகவத் அனுபவம் சிறந்தது என்று கொள்ளலாம்.

மேலும், திருஅத்தியயன உத்ஸவம் இருபது நாள்களுக்கும் மேலாக இனறும் தொடர்ந்து நடக்கிறது. இதை அனுபவிக்க தேஹத்தில் சக்தி வேண்டும் என்றபடி.

ஆக, பகவத் அனுபவத்துக்கு தடையான, பட்டினி நாளைத் தேடி எடுத்தீர்களே என்னும் பொருள்பட ஸ்ரீ பட்டர் கேள்வி.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இது விஷயமாக டாக்டர் எம்ஏவி ஸ்வாமியின் குறிப்பு பொருத்தமாக உள்ளது. காரணம் விசேஷ தர்மமான எம்பெருமான் பகவத் அனுவவம் சாமனிய தர்மமானவற்றை விட சிறந்தது என்றபடி.

இப்படி பகவத் அனுபவம்.நடந்து கொண்டிருக்கையில் உணவு பற்றி அதை விடுத்து பட்டினி இருப்பது பற்றி நினைவு எப்படி வந்ததோ என்றும் கொள்ளலாம்.!

  • வானமாமலை பத்மனாபன்

Related articles

Recent articles

spot_img