
ஒலிம்பிக் -கில் இன்று இந்தியா… போட்டி முடிவுகள்!
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஹாக்கியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது மற்றும் குழுவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குழுவில் முதல் நான்கு இடத்தைப் பெறுகின்ற அணிகள் காலிறுதிப் போட்டியில் விளையாடும்.
பி.வி. சிந்து இன்றைய ஆட்டத்தை நேர் செட்களில் வென்றதன் மூலம் காலிறுதிக்குத் தேர்வானார்.
இந்திய வில்வித்தைப் போட்டியாளர் அதான் தாஸ் இன்று எதிர்பாராத வெற்றி பெற்றார். அவரும் நாளை மறுநாள் காலிறுதியில் விளையாடுவார்.
10 மீ பிஸ்டல் ஷூட்டிங்கில் மனு பாக்கர் மற்றும் யஷஸ்வினி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற தவறிவிட்டனர்
கோல்ஃப் தனிநபரில் ஏ.லஹிர் 14ஆவது இடத்தில் உள்ளார். அவருடன் இன்னும் 11 பேர் 14ஆம் இடத்தில் உள்ளனர். பதக்கம் இல்லை. மற்றொரு வீரரான உதயன் மானேவுக்கு நாளை இன்னும் ஒரு விளையாட்டு உள்ளது
அருண் லால் ஜாட் மற்றும் அரிவிந்த் சிங் இரட்டை துடுப்பு வலிக்கும் படகுப் போட்டியில் தோல்வியடைந்து 12ஆவது இடத்தைப் பிடித்தனர். இந்திய துடுப்புப் படகுப் போட்டியாளார்களின் சிறந்த செயல்திறனை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
விஷ்ணு சரவணன் இன்றைய போட்டிகளில் 27ஆவது இடத்தில் உள்ளார். இன்னமும் போட்டிகள் உள்ளன. முதல் பத்து இடத்தைப் பிடிப்பவர்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.
கணபதி மற்றும் வருண் தக்கர் இன்னமும் போட்டிகள் உள்ளன. பதக்கம் பெறும் நிலையில் இல்லை.
பட்டாம்பூச்சி நீச்சலில் தகுதி பெற சஜன் பிரகாஷ் தவறிவிட்டார்
இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார் (+ 91 கிலோ) தனது முதல் ஒலிம்பிக் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார், ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை தனது தொடக்க ஆட்டத்தில் தோற்கடித்தார்.
மேரி கோம் தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சண்டையிட்டு, கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.