
ஹைதராபாத்தில் யூடியூபரைப் போட்டு அடித்த கடை உரிமையாளர்…
பிராங்க் வீடியோ சேனலால் ஹைதராபாத் ஜெகதீஷ் மார்க்கெட்டில் ஒரு மொபைல் கடையில் தகராறு நேர்ந்தது.
‘ஹைதராபாதி ப்ராங்க்’ என்ற பெயருள்ள ஒரு யூடியூப் சேனலின் ஆங்கர் தாங்கள் எடுக்கும் ஒரு குறும்பு வீடியோவின் ஒரு பாகமாக ஹைதராபாத் அபிட்ஸ் என்ற இடத்தில் ஒரு மொபைல் கடை உரிமையாளரோடு தகராறு செய்தார்.

அந்த தகராறு முற்றியதால் கோபத்துக்காளான கடை முதலாளி அந்த யூடியூப் ஆங்கரை போட்டு அடித்து சாத்து சாத்தென்று சாத்தினார். அதற்குள் வீடியோ எடுத்தவர்கள் இது வெறும் குறும்புத்தனமான வீடியோ… எங்கள் யூடியூப் சேனலுக்காக எடுக்கிறோம் என்று பலமுறை எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் கோபம் தலைக்கேறிய கடை முதலாளி ஆங்கரை மேலும் வேகமாக அடித்தார்.
விவரம் அறிந்த அபிட்ஸ் போலீசார் இருவரையும் பாதுகாப்பில் எடுத்து ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.