இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் – இரண்டாவது நாள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆட்டநேர இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸ் 202 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன் (புஜாரா 35*, ரஹானே 11*, ஜான்சன் 1-18) தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் 229 ரன் (பீட்டர்சன் 62, பவுமா 51, தாக்கூர் 7-61). இந்தியா 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஷர்துல் தாகூரின் 7 விக்கெட்டுகள் எடுத்தும் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெறுவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை, ஆனால் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை சாதகமாகத் தொடங்கி 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது – ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 58 ரன்கள் முன்னிலையில் இருந்தது. .
முகமது சிராஜ் நேற்று பந்துவீசும்போது காலில் சுகுக்கு ஏற்பட்டது. அவர் வலியுடன் மதானத்தைவிட்டுச் சென்றார். அந்த ஓவரில் மீதமுள்ள 5 பந்துகளை ஷர்டுல் வீசவேண்டியிருந்தது. இன்று சிராஜ் ஆட வரவில்லை. ஆனால் தாகூர் சிறப்பாக பந்து வீசி 61 ரன்களுக்கு 7 விக்கட்டுகள் எடுத்தார், இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் சிறந்த பந்துவீச்சு.
எவ்வாறாயினும், எட்டாவது விக்கெட்டுக்கு மார்கோ ஜான்சன் மற்றும் கேசவ் மகராஜ் இடையேயான 38 ரன் கூட்டணி தென்னாப்பிரிக்காவை இந்தியாவின் ஸ்கோரைக் காட்டிலும் அதிக ரன் எடுக்கவைத்தது. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஆரம்பத்திலேயே கே.எல். ராகுலை இழந்தது. மயங்க் அகர்வால் தனது 23 ரன்களில் ஐந்து பவுண்டரிகளை அடித்து நன்றாக விளையாடுவது போலத் தோற்றமளித்தார், ஆனால் ஒலிவியர் பந்து வீச்சில் அவர் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தார்.
சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே, இந்தியா மற்றொரு விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 42 பந்துகளில் 7 பவுண்டரிகள் உதவியுடன் 35 ரன்கள் எடுத்தார், அதில் இரண்டு நாள் இறுதி ஓவரில் வந்தது, ரஹானே 11 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸில் பீட்டர்சன் (62), பவுமா (51) இருவரும் அரைசதம் கண்டனர். ஆனால் மொத்த தென் ஆப்பிரிக்க அணியும் மிக மெதுவாக ஆடினர். அவர்களின் ரன் ரேட் 2.87.
அதே சமயம் இந்திய அணி 20 ஓவரில் 85 ரன் எடுத்தனர். அவர்களின் ரன் ரேட் 4.25. வானிலை எதிர்பார்த்தது போல, ஜோகன்னஸ்பர்கில் மழை பெய்யவில்லை.
புஜாராவும், ரஹானேயும் நாளை சிறப்பாக ஆடினால் இந்திய அணி வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. 250 முதல் 300 ரன் அதிகபட்சமாக எடுக்கவேண்டும்.