IND Vs BAN 1st Test: இந்தியா எதிர்பார்த்தபடி அபார வெற்றி!

ind ban test 1 - 2026

இந்தியா வங்கதேசம் முதல் டெஸ்ட்- ஐந்தாம் நாள் – 18.12.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வங்கதேச அணியை முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இந்தியா வங்கதேச அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி சிட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் அடித்தது. வங்கதேசம் அணி தனது 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் இந்திய அணி 254 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆனால் ஃபாலோ ஆன் செய்யாமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு ‘ஷுப்மன் கில்’ மற்றும் ‘சேத்தேஷ்வர் புஜாரா’ இருவரும் சதம் அடித்தனர். இதனால் மேலும் வலுவான நிலை பெற்ற இந்திய அணி 258/2 என இருக்கும்போது புஜாரா சதம் அடித்தவுடன் டிக்ளர் செய்தது. இதனால் இந்திய அணி 512 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 513 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்கள் சாண்டோ (67 ரன்), சாகிர் உசேன் (100 ரன்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

அதன்பிறகு வந்த வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் சாகிப் அல் ஹசன் 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை நடந்த அவரது போராட்டமும் எடுபடவில்லை. அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் சுழலில் அசத்தி முறையே நான்கு மற்றும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். வங்கதேசம் அணி 324 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி மீண்டும் செல்லுமா?

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 55.7% வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வங்கதேச அணியுடன் விளையாட உள்ளது.

அதிலும் வெற்றி பெற்று, பின்னர் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறி இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories