
ஐ.பி.எல் 2025 – பெங்களூர்ய் vs சென்னை – சென்னை – 28.03.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (196/7, ரஜத் படிதர் 51, பில் சால்ட் 32, விராட் கோலி 31, தேவ்தத் படிக்கல் 27, டிம் டேவிட் 22, நூர் அகமது 3/36, பதிரனா 2/36, கலீல் அகமது 1/28, அஷ்வின் 1/22) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (146/8, ரச்சின் ரவீந்திரா 41, தோனி 30, ஜதேஜா 25, ஷிவம் துபே 19, ஹேசல்வுட் 3/21, யஷ் தயாள் 2/18, லியம் லிவிங்க்ஸ்டோன் 2/28, புவனேஷ் குமார் 1/20) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (16 பந்துகளில் 32 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் விராட் கோலி (30 பந்துகளில் 31, 2 ஃபோர், 1 சிக்சர்) அதற்கடுத்து வந்த தேவதத் படிக்கல் (14 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அவரோடு இணைந்து ஆடிய ரஜத் படிதர் (32 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர்.
அதன் பின்னர் வந்த லிவிங்க்ஸ்டொன் (9 பந்துகளில் 10 ரன்,) ஜித்தேஷ் ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), இறுதியில் டிம் டேவிட் (8 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது.
197 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய சொந்த மண்ணில் இரண்டாவதாக ஆடவந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (31 பந்துகளில் 41 ரன், 5 ஃபோர்) மட்டும் சிறப்பாக ஆடினார்.
அவரோடு களமிறங்கிய ராகுல் திரிபாதி (5 ரன்), அவருக்குப் பின் வந்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன்), தீபக் ஹூடா 4 ரன்), சாம் கரன் (8 ரன்) ஆகியோர் சரியாக ஆடவில்லை. இவர்களுக்குப் பின்னர் ஆட வந்த ஷிவம் துபே (15 பந்துகளில் 19 ரன்), ரவீந்தர் ஜதேஜா (19 பந்துகளில் 25 ரன்) அஷ்வின் (8 பந்துகளில் 11 ரன்), தோனி (16 பந்துகளில் 30 ரன்) ஆகியோர் சேர்த்த ரன்களால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்தது.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு அணி சென்னை அணியை வென்றது.
பெங்களூரு அணியின் அணித்தலைவர் ரஜத் படிதர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.





