சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1: ஹாமில்டன் முன்னிலை

Published:

01 Sep17 Formula one - 2026

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு சீசனின் 15வது பந்தயமான இதில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன் 1 மணி, 51 நிமிடம், 11.611 விநாடியில் 61 சுற்றுகளை பூர்த்தி செய்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+8.961 விநாடி) 2வது இடமும், பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (+39.945 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

வெற்ஸ்டாப்பனுக்கு 18 புள்ளியும், வெட்டலுக்கு 15 புள்ளியும் கிடைத்தன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (241), கிமி ரெய்கோனன் (174) அடுத்த இடங்களில் உள்ளனர்.16வது பந்தயமாக ரஷ்யன் கிராண்ட் பிரீ செப். 28-30 தேதிகளில் நடைபெற உள்ளது.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

Related articles

Recent articles

spot_img