வலது கையில் எலும்புமுறிவு மெஸ்ஸி 3 வாரம் ஓய்வு

விளையாட்டு

02 Oct22 dhin Messi - 2026

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், செவில்லா அணிக்கு எதிராக விளையாடியபோது பார்சிலோனா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஏலும்புமுறிவு ஏற்பட்டது.எதிரணி வீரர் பிராங்கோவுடன் மோதி கீழே விழுந்த மெஸ்ஸிக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு மைதானத்திலேயே கட்டு போடப்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மெஸ்ஸி 3 வார காலம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செவில்லா அணியுடனான போட்டியில் பார்சிலோனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.