ஏடிபி உலக டூர் பைனல்ஸ் பெடரர் வெற்றி

விளையாட்டு

01 Nov15 Dhin Tennis - 2026

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தனது 2வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். லண்டன் O2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் 2 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதி வருகின்றனர். ஹெவிட் பிரிவில் இடம் பெற்றுள்ள பெடரர் தனது முதல் போட்டியில் ஜப்பானின் கெய் நிஷிகோரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அடுத்து தனது 2வது லீக் ஆட்டத்தில் டொமினிக் தீமுடன் (ஆஸ்திரியா) மோதினார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். அவர் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை சந்திக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.