
கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது.
ஊதிய உயர்வு, மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 67 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசர கால பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.