December 6, 2025, 7:56 PM
26.8 C
Chennai

சபரிமலை குறித்த தீர்ப்பில்… எங்கே இடறுகிறார்கள் தெரியுமா..?

sabarimali iyappan kovil 1 1 - 2025

/The Supreme Court clarified that the right of women to enter mosques and that of Parsi women to enter fire temple are also connected matters. Noting that courts should tread cautiously in matters of religious beliefs, the court referred it to a seven-judge bench.//

சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மசூதிகளில் பெண்கள் தொழ அனுமதிக்கலாமா கூடாதா… பார்சி அல்லாதவரைத் திருமணம் செய்துகொண்ட பார்ஸி பெண்ணை பார்ஸி கோவிலுக்குள் அனுமதிக்கலாமா கூடாதா என்பதும் ஒரேமாதிரியானதுதான் என்பதுபோல் இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இது முழுக்கவும் தவறு.

(புரை தீர்த்த நன்மை பயக்கும்)
பொய் சொல்வதும் தவறுதான்.
திருடுவதும் தவறுதான்.
கொலையும் தவறுதான்.
எனவே மூன்றுமே ஒரே மாதிரியாக விவாதிக்கப்படவேண்டிய / தண்டிக்கப் படவேண்டிய விஷயம் என்று சொல்வதைப் போன்றது இது.

மசூதியில் எந்த வயதுப் பெண்ணுமே அனுமதிக்கப் படுவதில்லை. அதுவே மிக மிகப் பெரிய சமத்துவ மறுப்பு.

பார்ஸிகள் விஷயத்தில் மதம் மாறியதற்கு சமமான செயலைச் செய்தபின் மத உரிமை பற்றிய பேச்சு அதிகம் எழத் தேவையில்லை. கிறிஸ்தவப் பெண் இஸ்லாமிய ஆணை மணந்துகொண்ட பின் சர்ச்சுக்குள் போயாகவேண்டும் என்று கேட்டால் அந்த இஸ்லாமிய ஆண் அனுமதிப்பாரா… அப்படியானால் சர்ச்சுக்குள்ளேயே இருந்துகொள் என்று சொல்லமாட்டாரா என்ன..?

சபரிமலையைப் பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு 10 வயதுக்கு முன்பாகவும் 50 வயதுக்குப் பின்பாகவும் தரிசிக்க தடையே கிடையாது.

இரண்டு பெரிய தவறுகளைச் சொல்லிக் காட்டி மிக மிகச் சிறிய, சரியல்ல… தவறுமல்ல என்று சொல்லும்படியான ஒரு விஷயத்தில் தீர்ப்பு வழங்கவேண்டியிருக்கும் நிலை மிகவும் வேதனைக்குரியது.

சமத்துவப் பெண்ணுரிமை பேசும் இடதுசாரி, திராவிட அறீவிஜீவித் தீவிரவாதிகள் சல்லிக்கட்டிலும் இதே போல் ஒரு சமத்துவ மறுப்பு இருக்கிறதே… காளைகளை ஆண்கள் மட்டுமே அடக்க வேண்டுமா… என்று அங்கு போய் சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்யலாமே.

ஏழு பேர் பெஞ்சில் இஸ்லாமிய, பார்சி உரிமை மறுப்புகளோடு இந்த சல்லிக்கட்டு உரிமை மறுப்பையும் சேர்த்தே விவாதிக்கட்டும்.

அதைவிட முக்கியமாக, சபரிமலைக்குப் புறப்பட்ட/ புறப்படும் வீராங்கனைகளை அரசு அலேக்காகத் தூக்கி, வரும் பொங்கலன்று தேனி மாவட்ட சல்லிக்கட்டு விழாவில் கனிமொழி தலைமையில் காளையை அடக்கிக் காட்ட வழி செய்து கொடுக்கட்டும்.

கடவுளை நாங்க கும்பிடுவதில்லை. ஆனால், அங்க ஒரு அநீதின்னா பொங்கிடுவோம் எனும் சமத்துவப் போராளிகள் முதலில் சிவபெருமானின் காளையைத் தாண்டி ஐய்யனின் புலியிடம் வரட்டும்.

  • பி.ஆர்.மகாதேவன் (எழுத்தாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories