களியக்காவிளை: இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு! சிசிடிவி வெளியீடு!

கிரைம் நியூஸ் தமிழகம்
kalikavalai - 2026

காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமான இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

kalikavalai 1 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்த போது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

kalaikavalai 2 - 2026

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

kalikavalai 3 - 2026

துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிய குற்றவாளிகளின் அடையாளம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதன்படி குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்களும் வீடியோக்களும் தெளிவு படுத்தியுள்ள நிலையில், தபீக், ஷமீம் ஆகிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறது காவல்துறை.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.