
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் காரணமாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் , சில தளர்வுகளை செய்துள்ளது அரசு.
ஊரடங்கு உத்தரவால் பல்வேறு கடைகள் அடைப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு டீக்கடைக்காரர்களும், பேக்கரி கடைக்காரர்களும் தங்களது கடைகளை திறக்க சுத்தம் செய்துள்ளனர்.
அவ்வாறு சுத்தம் செய்வதற்கு பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு பேக்கரி நடத்தி வருபவர் தனது பேக்கரியை திறந்துள்ளார். அப்பொழுது அவரது பேக்கரிக்குள் 8 அடி நீளசாரைப் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் இது குறித்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அங்கு வருவதற்க்குள் பாம்பு பிடி வீரர் பார்த்திபன் என்பவர் உதவியுடன் 8 அடி நீள சாரைப் பாம்பை பிடித்து அப்பகுதியினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. கடைகளை திறப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.



