
வேலூர் சத்துவாச்சாரியை பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா.. இவருக்கு 20 வயதாகிறது. ஜோலார்பேட்டையை சேர்ந்த சிவசக்திவேல் என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. கலைரஞ்சனி என்று பெயர் .. சிவசக்திவேல் வயது 21.
இந்நிலையில், லாவண்யாவை சிவசக்திவேலுக்கு பிடிக்கவில்லை.. அதனால் அவரை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பித்தார். அந்த பெண்ணுடன் தனியாக குடும்பமும் நடத்தி வருகிறார்.
இதை பார்த்ததும் லாவண்யாவுக்கு கோபம் அதிகமாக குழந்தையை தூக்கி கொண்டு கே.வி.குப்பத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு இடத்தில் கட்டிட வேலைக்கும் போனார். அந்த இடத்தில் பழக்கமானவர்தான் பிரவீன்குமார். இவருக்கும் 21 வயசுதான். பிரவீன்குமாருக்கு கல்யாணம் ஆகவில்லை. இதனால் லாவண்யாவும் தனக்கு கல்யாணம் ஆகவில்லை, “சிங்கிள்” என்று சொல்லி பழகி வந்துள்ளார்.
இதை நம்பிய பிரவீன்குமார், லாவண்யாவை ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி கொண்டார். அந்த குழந்தை யாருடையது என்றுகூட கேட்காமல் பிரவீன்குமார் அந்த வீட்டிலேயே குடும்பமும் நடத்த ஆரம்பித்தார்.
இந்நிலையில், 17-ந்தேதி இரவு குழந்தை கலைரஞ்சனி திடீரென இறந்துவிட்டாள். இது சம்பந்தமாக போலீசாருக்கு புகார் சென்றதும், விசாரணையும் ஆரம்பமானது. முதல் விசாரணையே லாவண்யாதான். அவரை தொடர்ந்து பிரவீன்குமார், அவரது தந்தை வெங்கடேசன், உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்தது.
17-ந் தேதி இரவு 8.30 மணிக்கு நடந்த சம்பவம் இதுதான்: “பிரவீன்குமாரும், அவரது அப்பாவும் குடிபோதையில் வீட்டில் இருந்துள்ளனர். பிரவீன்குமார் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தபோது, வெங்கடேசன் அங்கு வந்தார். இது யார் குழந்தை என்று துருவி துருவி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், கலைரஞ்சனியிடம் இது யார் குழந்தை என்று அதே கேள்வியை கேட்டார். அப்போதுதான் தன் முதல் கணவருக்கு பிறந்த என்னுடைய குழந்தை என்றார்.
இதை கேட்டு பிரவீன் குமாருக்கும் அவரது அப்பாவுக்கும் தலையே சுற்றிவிட்டது.. இவ்வளவு நாள் காதலித்து ஏமாற்றியதும் இல்லாமல், கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருப்பதையே மறைத்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில், பிரவீன்குமார், லாவண்யாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கி தரையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து அங்கேயே இறந்துவிட்டது.
இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இப்போது பிரவீன் குமார் கைதாகி உள்ளார். தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. “சிங்கிள்” என்று சொல்லி ஏமாற்றிய பெண்ணால், ஒரு குழந்தையை அநியாயமாக இப்படி கொன்று விட்டார்களே என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.