
திருமணமாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியர், இ-பாஸ் கிடைக்காததால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சின்ன பொன் பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிராமன் (55), தமிழரசி (50) தம்பதியினர் இவர்கள் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் முடித்து அவர்களது சொந்த ஊராண செஞ்சி தாலுக்காவில் வசித்து வந்துள்ளனர்,
விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி ஹரிராமனுக்கு கடந்த 20-வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தினால் பல்வேறு சிகிச்சைகளை மேற்க்கொண்டு பலனளிக்காத காரணத்தினால் கடந்த ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்,
இந்நிலையில் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
20 ஆண்டு காலமாக காத்திருந்து அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளோடு தன் சொந்த ஊருக்கு செல்ல பல முறை முயற்ச்சித்தும் எந்த பலனும் இல்லை இதனால் வீட்டு வாடகை, மற்றும் உணவு, குழந்தை செலவு ஆகியவற்றிக்கும் பணமில்லாமல் சென்னையில் தவித்து வருகின்றனர்,
ஏழை விவசாயியான ஹரிராமன் தன் மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊரான செஞ்சி திரும்ப செல்ல அரசின் பல்வேறு வழிகளை கடைபிடித்தும் அனைத்து கானல் நீராய் கரைந்தன.
பின்னர் அரசின் இ பாஸ் சேவையினை கொண்டு சொந்த ஊருக்கு திரும்பலாம் என 6 முறை இ பாஸ் விண்ணப்பித்தும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும் மேலும் தன் முயற்சியை கைவிடாது தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்
விவசாயியான ஹரிராமன். தொடர்ந்து மூன்று மாத காலமாக சென்னையில் தங்கி வருவதால் கையில் வைத்திருந்த பணம் அனைத்தும் தீர்ந்து தன் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தற்பொழுது இரட்டைக் குழந்தைகளோடு தவித்து வருகின்றனர் அத்தம்பதியினர். தமிழக அரசு கவனத்தில் உதவ முன் வரவேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக உள்ளது.