இராமாயணம், மகாபாரதக் கதைகள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் டிஆர்பியில் இடமும் பிடித்தது.

தற்போது மகாபாரத்ததை பிரம்மாண்ட திரைப்படமாக்கும் முயற்சியில் அமீர் கான் இறங்கியியுள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை உருவாக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இவர் பாகுபலி 1,2 , மகதீரா , பஜ்ரங்கி பைஜன் ,மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியவர். பிரபல இயக்குநர் இராஜமௌலியின் தந்தை. இதுகுறித்து விஜயேந்திர பிரசாத்திடம் கேட்ட போது மகாபாரதத்தை உருவாக்கும் வேலையில் இறங்கிவிட்டோம். இதைத்தவிர வேறு எதையும் தற்போது சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மகாபாரதத்தில் கிருஷ்ணராக அமீர்கானும் , அர்ஜூனராக பிரபாஸும் , திரௌபதியாக தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஊரடங்கு முடித்தவுடன் மகாபாரதம் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

மகாபாரதக் கதையில் புகழ்பெற்ற கதாபாத்திரமான கர்ணனின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு தமிழில் விக்ரம் நடிக்க கர்ணன் படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல நாவல்களில் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் கதையும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. சமீப காலங்களில் வரலாற்றுக் கதைகளை நோக்கி தமிழ்சினிமாவின் கவனம் ஈர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது.



