
திருவள்ளூர் அருகே செல்போன் திருட்டு வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு போலீஸ் எஸ்ஐ சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று வயலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து வந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(26), சரண்ராஜ்(25) என்பதும், அவர்கள் பல்வேறு செல்போன் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 28 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.