அரை நிர்வாணமாய் பெண்ணின் சடலம்! கோவிலுக்குள் கிடந்த மர்மம்!

கிரைம் நியூஸ் தமிழகம்
kadalur - 2026

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றில் அரை நிர்வாணமாக பெண்ணின் சடலம் ஒன்று கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருக்கும் மேலக்கல் பூண்டி அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சம்பவ தினத்தன்று இந்த கோவிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்மணி வடகாரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மனைவி கருப்பாயி என்பது தெரியவந்துள்ளது.

kadalur 1 - 2026

இருப்பினும், இந்த பெண்ணின் மரணம் கொலையா? அல்லது அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என்று முழு தகவலும் தெரியாத நிலையில், பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.