spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்தமிழகத்தில் பரவலாக இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பரவலாக இன்று கனமழைக்கு வாய்ப்பு!

- Advertisement -
imdchennai-report1
imdchennai report1

தமிழகத்தில் பரவலாக திங்கள் கிழமை இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சனி இரவு ஒரே நாளில் புதுச்சேரியில் மட்டும் 19 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

imdchennai-report
imdchennai report

இந்த திடீர் மழை குறித்து, வானிலை ஆய்வு மைய பணியில் இருந்து ஓய்வு பெற்ற முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் குறிப்பிட்ட போது…

இலட்சத்தீவுகள் மீது ஒரு வளிமண்டலக் காற்றுச் சுழற்சி நிலவுகிறது. வங்கக் கடலில் இலங்கை கடற்கரையிலிருந்து ஆந்திரக் கடலோரம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுகிறது.

இதன் காரணமாக
இன்றும் நாளையும் – தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
23.02.2021 முதல் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

தமிழகத்தில் 20.02.2021 காலை 0830 மணி முதல் 21.02.2021 காலை 0830 மணி வரை பெய்த மழை அளவுகள் (செண்டிமீட்டரில்):

இயல்புக்கு மாறான மழை: பாண்டிச்சேரி (புதுச்சேரி மாவட்டம்), கடலூர் (கடலூர் மாவட்டம்) தலா 19;
கனமழை: மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம்), குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) தலா 10; பாபனாசம் (திருநெல்வேலி) 8;
இதர மழை அளவுகள்:
சேரன்மாதேவி (திருநெல்வேலி), புவனகிரி, பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7;
கூனூர் PTO (நீலகிரி) 6;
சூளகிரி (கிருஷ்ணகிரி), மரக்காணம், வானூர் (வில்லுபுரம்) தலா 5;
உத்துக்குளி (திருப்பூர்), சங்கரிதுர்க் (சேலம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பழனி (திண்டுக்கல்) தலா 4;
ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், பண்ருட்டி (கடலூர்), திருப்புவனம் (சிவகங்கை), பவானிசாகர் (ஈரோடு), கோத்தகிரி, கூனூர் (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), மேட்டூர் (சேலம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 3;
சேத்தியாதோப்பு, சிதம்பரம் (கடலூர்), உடுமலைப்பேட்டை, மூலனூர் (திருப்பூர்), திருச்செங்கோடு, பரமத்திவேலூர் (நாமக்கல்), ஈரோடு, பவானி, தாளவாடி, கொடுமுடி (ஈரோடு), கொடைக்கானல், காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சீர்காழி (நாகப்பட்டினம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), காரியாப்பட்டி (விருதுநகர்), பெண்ணாகரம் (தர்மபுரி) தலா 2;
பெரியகுளம் (தேனி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), மயிலாடுதுறை, மணல்மேடு (நாகப்பட்டினம்), அரிமளம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லார், அன்னூர், வால்பாறை PTO (கோவை), செங்கம் (திருவண்ணாமலை), விரகனூர், எடப்பாடி, ஆத்தூர் (சேலம்), திருப்பூர், கிருஷ்ணகிரி, ஜெயங்கொண்டம் (அரியலூர்), திண்டுக்கல், எம்ஜிஆர் நகர் (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), திருவிடைமருதுர் (தஞ்சாவூர்), திருத்தணி (திருவள்ளூர்), மங்கலபுரம் (நாமக்கல்), தென்பரநாடு (திருச்சி), ஹோகனக்கல் (தர்மபுரி) தலா 1.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe