December 5, 2025, 11:29 PM
26.6 C
Chennai

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் பணி!

jobs - 2025

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள 174 களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆர்வமும் , தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப்பணியாளர்கள் சீனியாரிட்டி முறையில் தேர்வு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைக்குத் தேவையாக அனைத்துப் பணியாளர்களையும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும் மற்றும் சில பணியிடங்களை நேரடியாக நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசாணை வெளியானது.

இந்த மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் , ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் நிலையில் தற்போது தமிழக மருத்துவ வாரியத்தில் களப்பணியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ வாரியத்தில் களப்பணியாளர் (Field Assistant) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 174

கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். மேலும் லேப் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு – இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ST/SCA/SC/MBC (V)/MBC & DNC/MBC பிரிவினருக்கு 59 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், http://mrbonline.in/ என்ற ஆன்லைன் பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 600 மற்றும் SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்பக்கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் லேப் டெக்னீசியன் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20 சதவீதத்திற்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30 சதவீதத்திற்கும், லேப் டெக்னீசியன் சான்றிதழ் படிப்பில் பெற்ற 50 சதவீதம் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது.

சம்பளம் : ரூ.18,200 – 57,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே மருத்துவத்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2021/DOC/Field_Assistant_Notification_13.01.2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories