மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலர் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
இன்று அதிகாலை பரப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நம்பியாற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிவந்த டிராக்டரை வழிமறித்தார் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், ஏட்டு ஜெகதீஷை வெட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.