மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழிசை

Published:

11 May16 tamilisai - 2026

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொத்தம் 14 இடங்களில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியானது.

மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் மத்திய அரசிடம் ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதில் அறிக்கையிலை மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டடுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img