ரயிலிலிருந்து தவறிவிழுந்து பெண் படுகாயம் ! தூக்கக்கலக்கத்தில் மாற்றித் திறந்த கதவு !

தமிழகம் பொது தகவல்கள்

umadevi - 2026வேலூர்: சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.

சென்னையில் இருந்து 9.15 மணிக்கு காவேரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இந்த ரயில் பெங்களூர் கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த நடராஜன் அவரது மனைவி உமாதேவி தனது வீட்டிற்கு செல்வதற்காக அதில் பயணம் செய்து வந்துள்ளார்

அப்போது ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் என்ற பகுதிக்கு நள்ளிரவு 12.52 மணிக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. திடீரென உமாதேவி கழிவறைக்கு செல்வதற்காக எழுந்து சென்றுள்ளார்

அப்போது உமாதேவி பயணிகள் ஏறி இறங்கும் வழியில் தூக்ககலக்கத்தில் மாறுதலாக சென்ற விட்டார். இதனால் ரயிலுக்கு வெளியே தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை யாருமே கவனிக்கவில்லை அவர் இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார.

அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு தற்போது கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.