திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ். அவரது மகள் சினேகா அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்யும் செல்வராஜ் , நேற்று முன் தினமும் தகராறில் மனைவியை தாக்கியுள்ளார். அப்போது, அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்? என தட்டிக்கேட்ட சினேகாவை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சினேகா வீட்டிற்குள் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சினேகாவின் மரணத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மண் வெட்டியால் தாக்கியதில் சினேகா இறந்ததை மறைக்க சினேகாவின் உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக செல்வராஜ் பொய் கூறி நாடகமாடுகிறாரா? என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் செல்வராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


