December 7, 2025, 2:41 AM
25.6 C
Chennai

செக்கிழுத்த செம்மல்; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., நினைவு நாள்!

vochidambaram1 - 2025

இன்று (18-11-2019) செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள்.

செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, கோரல்மில் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குத் தன் சொத்துகளை எல்லாம் விற்று உணவளித்து, வங்கக்கடலில் முதல் சுதேசக் கப்பல் விட்ட உத்தமர் வ.உ.சிதம்பரனாரை நினைத்துப்பார்க்க நேரமில்லாமல் யாரோ நயன்தாரா என்ற நடிகையின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகின்ற இந்த மாந்தர்களை என்ன சொல்ல?

தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை உயிலில் எழுதிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு தினம் …

தன் வரலாறுகளை மறந்து சல்லாபங்களிலும், சந்தோஷங் களிலும், வேடிக்கைகளிலும் வெட்டிப்பேச்சுகளிலும் காலத்தைக் கழித்தால் நிலைமைகள் புரையோடித்தான் போகும். இதனால்தான் மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதிகள் எழுகின்றனர்.

இந்த வினைகளை எல்லாம் பார்க்கும்போது முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன.

“இன்று பார தத்திடை நாய்போலே
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ

நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ

சென்று போன பொய்யெலாம் மெய்யா கச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ

வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ

நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ

மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ

சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய் போ போ போ

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ

தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ

சோதி மிக்க மணியிலே காலத் தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ”

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

எப்பேர்ப்பட்ட செல்வந்த குடும்பத்தில் பிறந்து
பரம்பரை வழக்கறிஞர் தொழில் செய்து
தேச விடுதலைக்காக தன் சொத்தை விற்று கப்பல் வாங்கி பற்றாக்குறைக்கு ஊரெல்லாம் கடன் வாங்கி
இரட்டை ஆயுள் தண்டனை அந்த தீர்ப்பை கேட்ட தம்பி மனநிலை பாதிப்பு
வக்கீல் தொழில் உரிமை பறிப்பு
கடைசியில் வறுமையில் வாடி இறந்த வஉசி
காந்தியும் நேருவும் சிறையில் புத்தகம் எழுதினர். வஉசி செக்கிழுத்தார் . இதன் அடிப்படை தான் இன்றும் நமக்கு விளங்கவில்லை
– இன்று ஐயா வஉசி உலகை விட்டு பிரிந்த நாள்

~ கா.குற்றாலநாதன், நெல்லை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 83வது நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதியில் இருக்கும் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு இன்று காலை 11 மணிக்கு மாலை அணிவித்து #இந்துமுன்னணி சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories