மலையாளத்தில் புகழ்பெற்ற நடன கலைஞரான மெத்தில் தேவிகா, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மோகினியாட்டத்தின் விதத்தில் சிறப்பு நடன அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மோகினி ஆட்டத்தின் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்த புகழ்பெற்ற நடனக் கலைஞரான மெத்தில் தேவிகா, கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, அதனை எதிர்த்துப் போராடுவது எப்படி என்பது குறித்து விளக்கி, மோகினியாட்டத்துடனான வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை தனது யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார் தேவிகா.
இந்த வீடியோவில், கொரோனா வைரஸை ஓர் அரக்கன் போன்று சித்திரிக்கும் தேவிகா, அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை விளக்குகிறார். மேலும் இந்த வைரஸ் எப்படி நம் உடலைத் தாக்குகிறது என்பதை விளக்கி காட்டி, அதனை விரட்டியடிக்க அனைவரும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அபிநயித்தில் காட்டுகிறார்.
மெத்தில் தேவிகாவின் இந்த நான்கு நிமிட காட்சியைப் பாராட்டி முன்னுரை கொடுத்துள்ளார் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா டீச்சர்