December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

வெத்தல போடுறது… நல்ல பழக்கம்! சாராயம் குடிப்பது கெட்ட பழக்கம்!

betal-leaf
betal-leaf

வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய சமூகம்!

அண்மைக் காலமாக என்னை மிகவும் ஆச்சரியப் படுத்திய ஒரு விஷயம் இது.

 தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் …. கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ….. முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக …. வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சார சீரழிவும்,அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து என் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க பட்டே விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலு படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  prostate இல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.

இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே.

  • ரவிசங்கர், ராஜபாளையம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories