அபூர்வ ஓவியம்! 19ம் நூற்றாண்டில்… இப்படி போஸ் கொடுத்த இளவரசி! எதற்கு தெரியுமா?

Published:

mysore pic2a

இந்த போட்டோவில் வலதுபுறம் இருக்கும் பெண்ணை கவனித்தீர்களா? அவர் புடவையை நகர்த்தி கையில் எதை காட்டுகிறார்?

இந்த பெயிண்டிங்கை கவனமாகப் பாருங்கள். இதில் இருக்கும் மூவரும் அரச குலத்தைச் சேர்ந்த அழகான பெண்கள். மிக ஒய்யாரமாக போஸ் கொடுத்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தன் புடவைத் தலைப்பை நகர்த்தி கையில் எதையோ காட்டுகிறார். அது என்னவென்று பார்ப்போம்!

சாதாரணமாக போட்டோ எடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் பெயிண்டிங்கில் எவ்வாறு இவ்விதம் நடந்தது?

உண்மையில் இந்த பெயிண்டிங் பின்னால் ஒரு பெரிய செய்தி உள்ளது.

mysore pic2

19வது நூற்றாண்டில் இந்தியாவில் அம்மை நோய் பரவலாக இருந்தது. அம்மை நோயால் மக்கள் பரிதவித்தனர். அந்த நேரத்தில் மைசூரில் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து வந்தது. அப்போது மைசூரை ஆண்டு வந்த மார்க் வில்கேஸ் என்பவர் மக்களுக்கு பிரிட்டிஷ் வாக்சின் போட வேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் அப்போது கூட இப்போது இருப்பது போலவே புகார்கள் எழுந்தன. பிரிட்டிஷ் தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து என்று மக்கள் எண்ணத் தொடங்கினார். பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயங்கினார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அப்போது இந்த போட்டோவில் வலதுபுறம் உள்ள தேவஜமணி என்ற இளவரசிக்கு திருமணத்திற்கு நிச்சயமாகி இருந்தது. அவர் மைசூர் இளவரசரின் மணப்பெண். அந்த நேரத்தில்தான் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு இந்த ஓவியத்திற்கு போஸ் கொடுத்து அனைவரும் வாக்சின் போட்டுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

mysore pic1

இந்த பெயிண்டிங் மூலம் தானும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறார். மைசூர் அரசாங்கத்தின் வரப்போகும் ராஜாவுக்கு மணமுடிக்க போகும் பெண்ணே தைரியமாக போட்டுக் கொண்டுள்ளார். மக்கள் கூட முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காகவே இந்த பெயிண்டிங்கை இவ்வாறு சித்திரித்துள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img