காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இதில் மத்திய அரசு மெத்தனமாக இருந்ததாகக் கூறி, ஸ்டாலின் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடன் நடைப்பயணம் துவங்கியிருக்கிறார்.
திருச்சி அருகே காவிரியும் கொள்ளிடமும் பிரியும் முக்கொம்புவில் தொடங்கியிருக்கிறார் இந்த காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை.
இந்நிலையில், இந்த நடைப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலிகளும் கிண்டல்களும் மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. காரணம், காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு தீர்க்கப்படாமல் போனதற்குக் காரணமாக இருப்பது திமுக., என்று குற்றம் சாட்டும் நெட்டிசன்கள், மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் இரண்டு தொழில்கள், மக்களை வஞ்சிக்கும் அபாயத் தொழில்கள். இந்தா இரண்டிலுமே, திராவிடக் கட்சிகளே கோலோச்சுகின்றன. ஒன்று, மணல் கொள்ளை, இரண்டாவது டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் தொழிற்சாலைகள்.
இந்நிலையில், அவற்றை மறைத்து ஸ்டாலின் காவிரியை மீட்பதாகக் கூறி நடைப்பயணம் செல்வது கேலிக்கூத்தானதுதான் என்று கூறும் நெட்டிசன்கள், இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்….
தலீவரே…
நீங்க காவிரி மீட்பு பேரணி போறா மாதிரி தெரில…
அடுத்து எங்க மணல் அள்ளலாம்ன்னு சர்வே எடுக்குறா மாதிரி தெரியுது…