சென்னையில் நடிகர் சிம்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்,
பேசினால் தான் பிரச்னை தீரும்; மவுன போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று திரைத் துறையினர் நடத்திய போராட்டத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்த போது, நடிகர் சிம்பு இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பில்லை என்று கூறிய சிம்பு, மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
திரைத்துறையில் பல பிரச்னைகள் இருக்கும்போது பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சூனியம் வைத்ததுபோல் தமிழகம் உள்ளது; தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன
ஐ.பி.எல் போட்டி நடந்தால் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அப்துல் கலாம் ஆன்மா கூறியது
திரைத்துறையில் பல பிரச்சினைகள் உள்ள போது, காவிரி – ஸ்டெர்லைட்டுக்காக போராடுவது ஏன் என எனக்குப் புரியவில்லை என்று கூறினார் நடிகர் சிம்பு.




