இந்த நாட்கள்ல கடன் கொடுத்தீங்க… அவ்ளோதான்..! பிறகு நீங்க கடன் வாங்க நேரிடும்..!

Published:

2000rupeenote - 2026எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டம் ஆகிவிடும்?

நன்கு அறிந்த நண்பர்களேகூட, நாம் நாசமாய்ப் போவதற்கு முதல் காரணமாக இருக்கலாம்.  ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். தனக்கு போகவே தானமும் , தர்மமும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

கஷ்டத்தோடு கண்கலங்கி வந்து நின்று கடன் கேட்கும் பொழுது, இரக்கம் உள்ள மனிதர்கள் யாவரும் எளிதாக கடன் கொடுத்து விடுகின்றனர். கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அதே நன்றியுடன் பலர் நடந்து கொள்வதில்லை.

கடன் வாங்கும்போது நாம் அவர்கள் வீட்டிற்கு நாயாய் பேயாய் அலைந்தோம் அல்லவா? கடனை திருப்பி வாங்க அவர்கள் நம் வீட்டிற்கு அலையட்டும் என்ற மனப்பான்மையுடன் பலர் உள்ளனர். மானம் மரியாதைக்கு பயந்து கடனை கண்ணியத்துடன் கட்டுபவர்கள் மிகவும் குறைவே!

கடன் கொடுத்தவருக்கே விபூதி அடிப்பவர் பலர்.

  1. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும், சனி திசை, சனி புத்தியில் கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பது மிக அரிது.

  2. ஏழரை சனியில், விரய சனியில் கொடுத்த பணமும் அம்பேல்தான்!

  3. ராகு திசையில் ராகு, சனி புத்தியில் கொடுத்த பணமும் அம்பேல்தான்.

  4. அட்டமாதிபதி திசையில், அட்டமச் சனியில் கொடுத்த காசு அவ்ளோதான்!

  5. விரயாதிபதி திசையில்  6 ,8 ,12-க்குடைய புத்திகளில் ஏழரைச் சனி, அட்டமச் சனி காலகட்டங்களில் நம்பி கொடுத்த பணமும் ஆற்றில் போடப்பட்ட பணமும் ஒன்றே. திரும்பக் கிடைப்பது மிக மிக கடினம்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இந்தக் காலகட்டங்களில் நீங்கள் யாருக்கும் ஜாமீனும் கொடுக்கக்கூடாது.

அது போல் சில நாட்கள், நட்சத்திரங்களில் கொடுத்த பணமும் திரும்ப வராது. செவ்வாய்க்கிழமை கடனை அடைக்க நல்லநாள் என்றாலும் கடன் கொடுக்க நல்ல நாள் அல்ல. அதுபோல் வெள்ளிக்கிழமையும் கடன் கொடுக்க வேண்டாம்.

கார்த்திகை திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, மூலம் இந்த நட்சத்திரம் நடப்பில் இருக்கும் நேரத்தில் கடன் கொடுக்க வேண்டாம்.

அதுபோல் வெள்ளிக்கிழமை, சுவாதி நட்சத்திரத்தில் கொடுத்த கடன் திரும்ப வராது! சுவாதி சுத்தமாக துடைத்து விடும் என்பார்கள். கவனம் தேவை!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img