
தான் பெற்ற மகளையே தன் காமத்திற்குப் பயன் படுத்திய இந்த ஷாஜஹானுக்கு காதல் முற்றி “தாஜ்மஹால்” கட்டினான் என்பதைச் சொன்னால் அவனே சமாதியிலிருந்து சிரிப்பான்…!
தன் வாழ் நாளெல்லாம் அபினுக்கும், மதுவுக்கும் அடிமையானவனாக, பெரும் பெண் பித்தனாக, குரூரம் நிரம்பிய இரக்கமற்ற கொலைகாரனாக, மதவெறியனாக இருந்த ஷாஜஹான் “தாஜ் மஹால்” என்று அழைக்கப்படுகிற ஒரு உன்னதக் கட்டிடத்தைக் கட்டியிருக்க வாய்ப்பே இல்லை. குரூரம் நிறைந்த கொலைகாரனுக்குக் கலை மனம் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்ன?
அந்தப்புரத்தில் ஆயிரக்கணக்கான பெண்களுடன் நாள் முழுக்க அடைந்து கிடந்த ஒரு மனிதன் தன்னுடைய பல மனைவிகளில் ஒரே ஒருத்திக்காக, அவள் இறந்த துக்கத்தில் அவள் நினைவாக தாஜ் மஹாலைக் கட்டிய கதை நம்பும்படியாகவா இருக்கிறது? அவ்வளவு காதல் இருக்கிற ஒரு மனிதன் மும்தாஜ் இறந்தபிறகு பிற பெண்களைத் திருமணம் செய்து கொள்ளாமலா இருந்தார்?
மும்தாஜை ஷாஜஹான் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18 வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது மும்தாஜ் வருடமெல்லாம் கர்ப்பிணியாகவே இருந்தார். இறுதியில் 14வது குழந்தை பிறப்பின்போது மும்தாஜ் இறந்து போனார். மனைவி மீது காதலில் ஊறித் திளைக்கிற எந்தக் கணவனாவது இப்படித் தன் மனைவியை பிள்ளை பெறும் மெஷினாக நடத்திக் கொல்வானா?
கண்ணில் கண்ட எந்தப் பெண்களையும் ஷாஜஹான் விட்டதில்லை. அது அவருடைய மந்திரிகளின் மனைவியானாலும் சரி; அவரது சொந்த மகள்களானாலும் சரி. அப்படியாகப்பட்ட ஷாஜஹானா மும்தாஜின் இறப்பைத் தாங்காமல் கதறி அழுதுகொண்டே தாஜ்மஹாலைக் கட்டியதாகச் சொல்வது எப்பேற்பட்ட கட்டுக்கதை? சொந்த வரலாற்றில் பொய்களையும், புனைகதைகளையும் மட்டுமே எழுதிக் கொண்ட மொகலாய அரசர்கள் சொல்வதனை மட்டுமே நாம் நம்ப வேண்டும் எனச் சொல்கிறவனின் மூளையை பரிசோதிக்க வேண்டும்.
தான் அரசனாக வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய உறவினர்களை எல்லாம் கொலை செய்தவர் ஷாஜஹான். அவருடைய தந்தையான ஜஹாங்கிர், ஷாஜஹானை முற்றிலும் வெறுத்து ஒதுக்கியவர். ஜஹாங்கிர் தன்னுடைய வரலாற்றில் எங்கெல்லாம் ஷாஜஹானுடைய பெயர் வருகிறதோ அங்கெல்லாம் “கேடு கெட்டவன்” (The wretched) என்றே எழுதவேண்டும் என்று உத்தரவிட்டு அதன்படியே எழுதியும் வைத்தார். ஜஹாங்கிர் இறந்த பிறகு ஷாஜஹான் பணம் கொடுத்து ஆட்களை அமர்த்தி “கேடு கெட்டவன்” என்கிற வார்த்தைய “இளவரசர்” என்று திருத்தியதும் பதிவாகித்தானே இருக்கிறது?
இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஷாஜஹான் ஒருபோது தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி வைக்கவில்லை. ஏன்? தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே கல்வெட்டு வைக்க முடியும்? ஷாஜஹானிடம் காசு வாங்கித் தின்ற வரலாற்றுக் குறிப்பெழுதும் கூட்டம்தான் ஷாஜஹன் தாஜ்மஹாலைக் கட்டியதாக பொய்யாக எழுதியது. அதனையே நாம் இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கிறோம். Time has come to rethink about that.
ஷாஜஹான் அரசனான வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போமே.
ஜஹாங்கிரின் மூத்த மகனான குஸ்ரூதான் பட்டத்திற்குரிய அடுத்த வாரிசு. ஆனால் ஜஹாங்கிர் இறக்கும்வரைக்கும் காத்திருக்க குஸ்ரூவுக்குப் பொறுமையில்லாததால் ஜஹாங்கிருக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டு தில்லியை நோக்கி வந்தார். கோபமுற்ற ஜஹாங்கிர் குஸ்ரூவை போர்க்களத்தில் தோற்கடித்து அவரைக் கைதியாகப் பிடிக்கிறார். கைதியாகப் பிடித்து குஸ்ரூவை சிறையிலிட்டிருந்தால் ஜஹாங்கிரை பாராட்டாலாம். ஆனால் ஜஹாங்கிர் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் குஸ்ரூவின் கண்களைப் பொசுக்கிக் குருடாக்கி விட்டார். முகலாய பாணி அது. குரூரங்களுக்குக் குறைவில்லை. அது சொந்த மகனாக இருந்தாலும் சரி; பெற்ற அப்பனாக இருந்தாலும் சரி.
ஜஹாங்கிர் குருடான மகனைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். இருந்தாலும் அவருக்குத் துக்கம் தாளவில்லை. இன்னொரு மகனான ஷாஜஹானின் மீதும் அவருக்குக் கடுமையான கசப்பு இருந்ததால் குஸ்ரூவின் மகனான சுல்தான் போலக்கி (Sultan Bolaki) தனக்குப் பின் டில்லி அரியணை ஏற வேண்டும் என முடிவெடுத்தார்.
இது அறிந்த ஷாஜஹான் மிகுந்த கோபமடைந்தார். இது நடந்த சமயம் ஷாஜஹான் தக்காணப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தார். ஜஹாங்கிருடன் நேரடியாக மோதி டில்லியைக் கைப்பற்றுவது கடினமானதால் வழக்கமான தன் தந்திரங்களைப் பயன்படுத்த முடிவெடுத்த ஷாஜஹான் டெல்லிக்குப் போய் ஜஹாங்கிரிடம் நைச்சியமாக நடந்து கொண்டார்.
மகன் திருந்திவிட்டான் என்று ஜஹாங்கிர் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பார்வையற்ற அண்ணன் குஸ்ரூவைத் தக்காணத்திற்கு அழைத்துச் சென்று தான் நன்கு கவனித்துக் கொள்வதாகச் சொல்கிறார். முதுமையிலிருந்த ஜஹாங்கிர் அதுவும் நல்ல யோசனைதான் என்று குஸ்ரூவை ஷாஜஹானுடன் தக்காணத்துக்கு அனுப்பி வைக்கிறார். ஷாஜஹான் தன்னுடன் தக்காணத்திற்கு வந்த குஸ்ரூவை விஷம் வைத்துக் கொன்றுவிட்டார். கோபமடைந்த ஜஹாங்கிர் ஷாஜஹானுக்குப் பாடம் புகட்டுவதற்குப் படையெடுத்து வரும் வழியில் இறந்துவிட்டார்.
மரணப்படுக்கையில் ஜஹாங்கிர் அவரது படைத்தலைவனும், மந்திரியுமான ஆஸஃப்கானிடம் குஸ்ரூவின் மகன் சுல்தான் போலக்கியை அரியாசனத்தில் அமர்த்தவும், சிறுவனான அவனுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளவும் வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறார். அப்படியே செய்வதாக தன்னுடைய தொடையில் தட்டி சத்தியம் செய்கிறார் ஆஸஃப்கான்.
அன்றைய நம்பிக்கைகளின்படி அந்தச் சத்தியம் ஆஸஃப்கானின் தொடைக்கு மட்டுமே கட்டுப்பட்டது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆஸ்ஃப்கான், ஷாஜஹானின் மாமனார். அவருடைய மூத்தமகளை ஷாஜஹான் திருமணம் செய்திருந்தார். எனவே மருமகனை அரியணை ஏற்ற மாமனார் மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டார்.
ஜஹாங்கிரின் மரணத்தால் ஸ்தம்பித்த நிர்வாகத்தை சரியாக்குவதற்கு சிறுவனான போலக்கி அரசராக அறிவிக்கப்பட்டார். போலக்கியைக் கொல்வதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. அதனை அறிந்த போலக்கியின் மாமன் மகன்கள் (கிறிஸ்தவராக மதம் மாறிய சுல்தான் தானியேலின் மகன்கள்) போலக்கியை எச்சரிக்கிறார்கள். அறியாத சிறுவனான போலக்கி அது உண்மையா என்று ஆஸஃப்கானிடம் கேட்க, அதனை மறுக்கும் ஆஸஃப்கான் போலக்கியின் மகனைக் கொலை செய்துவிட்டு உடனடியாக தில்லிக்கு வரும்படி ஷாஜஹானுக்கு ரகசியமாக செய்தி அனுப்புகிறார்.
நேரடியாக வந்தால் முகலாயப்படைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் ஷாஜஹான் செய்த தந்திரம் சினிமாக் கதைக்கு ஒப்பானது. ஷாஜஹான் இறந்துவிட்டதாகவும் அவரது பிணம் தில்லிக்கு எடுத்துக் கொண்டுவரப்படுவதாகவும் ஒரு செய்தியைப் பரப்புகிறார். ஆஸஃப்கான் சிறுவன் போலக்கியிடம் அது உண்மையான செய்திதான் என்று கூறி அவனை நம்ப வைக்கிறார். இறந்தது அரச குலத்தவரானதால் பாதுஷாவான போலக்கி கோட்டைக்கு வெளியே போய் ஷாஜஹானின் பிணத்தை சகல மரியாதையுடன் பெற்றுக் கொண்டு அரண்மனைக்கு வரவேண்டும் என்று அவனை அழைத்துக் கொண்டு செல்கிறார்.
ஒரு சவப்பெட்டிக்குள் ஒளிந்து படுத்துக் கொண்டு வரும் ஷாஜஹான், போலக்கியின் முகலாயப் படைகள் அருகில் வந்ததும் சவப்பெட்டியிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வருகிறார். ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடுகளின்படி முகலாயப்படைத் தலைவர்கள் ஷாஜஹான் அந்த இடத்திலேயே தில்லி பாதுஷாவாக அறிவிக்கிறார்கள்.
இது அறிந்த சிறுவன் போலக்கி அங்கிருந்து தப்பி ஓடுகிறான். தனக்கு எதிரானவர்களை தயக்கமின்றிக் கொலை செய்பவரான ஷாஜஹான் அவனைத் தப்பிச் செல்லவிடுகிறார். நாடெங்கும் பிச்சைக்காரனாகத் திரிந்த போலக்கி பாரசீகத்திற்குச் சென்று பாரசீக அரசர் ஷா ஷஃப்வியிடம் அடைக்கலமாகிறார்.
தொடர்ந்து அரியணை ஏறிய ஷாஜஹானால் அவரது பெரும்பாலான உறவினர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.
கட்டுரை – Narenthiran PS


