இந்த இடத்தில் அடிப்படையாக சில கேள்விகள் எழுகிறது. வாஸ்து என்பதை பற்றியெல்லாம் பேசத் தொடங்கியதே ஒரு இருபது வருடங்களுக்கு பின்னால்தான். அதற்கு முன்னால் வாஸ்து பற்றி பேச ஆள்இல்லை. மனையடி சாஸ்திரம் இருந்தது. அடிப்படையில் இரண்டுமே மனையை பற்றி பேசினாலும், ஒரு மனையைப் பற்றி, மனையின் அமைப்பை பற்றி, சுற்று சூழல் பற்றி, அடுத்த எதிர்த்த வீடு பற்றி, வீட்டின் திசையை பற்றி, வீடு அமைய வேண்டிய நீள அகலம் பற்றி, ஜன்னல் கதவு அமைய வேண்டிய அளவுகள் பற்றி என பல்வேறு கோணங்களை அலசிச் சொல்வது மனையடி சாஸ்திரம். கட்டிய வீட்டில் உள்ள குறைகளை சொல்வது வாஸ்து. இன்னும் பல விளக்கங்களோடு….
