சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!

Published:

கோவையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரணகோஷ யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பதைக் கண்டித்து கோவையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரண கோஷ யாத்திரை நடைபெற உள்ளது.

சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சூழ்நிலையில் நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்ற ஆச்சார நடைமுறைகளை அதேவகையில் தொடர்ந்து பின்பற்ற வலியுறுத்தி கோவையில் சரண கோஷ யாத்திரை கோவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

சித்தாபுதூர் ஐயப்பசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு விகேகே மேனன் ரோட்டில் பஜனையுடன் நிறைவடைகிறது.

இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img