சென்னை வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு வந்திருந்த சந்திரபாபு நாயுடு சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜவுக்கு எதிரான அணியில் இணைய விடுத்த அழைப்பை திமுக ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். பிரதமரை விட மிகச்சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கூறிய சந்திரபாபு நாயுடு, திமுகவுடன் தமக்கு நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளதாக குறிப்பிட்டார்.
தேசத்தையும், ஜனநாயகத்தையும் காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சந்திரபாபு நாயுடு, தனிப்பட்ட அரசியல் விருப்பங்களை விட, தேசிய நலன்தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
தமக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைவதாக கூறினார்.



