இன்று திருவெம்பாவையின் 15வது பனுவலை கேட்க இருக்கிறோம்.
தோழிகள் அவர்களுடைய இன்னொரு தோழி, எப்படி சிவனை பக்தி செய்கிறாள் என்பதைப் பற்றி கூறுவதாக இந்தப் பனுவலை அமைத்து இருக்கிறார் மாணிக்கவாசகர்.
அந்த தோழி, விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாளாம். அவளை சிவன் ஆட்கொண்டது போல நம்மையும் ஆட்கொள்ள காத்திருக்கும் சிவனின் தாள் பணிவோம் என்று கூறி நம்மை சிவபக்தியில் ஆள அழைக்கிறார் மாணிக்கவாசகர்.



