நாம் இதுவரை மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவையின் பாடலைகளையும் அவற்றின் விளக்கங்களையும் பார்த்து வந்தோம்.
இன்று முதல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி குறித்து காண இருக்கிறோம்.
திருபெருந்துறை என்கிற தலத்தில் இந்த திருப்பள்ளியெழுச்சி பனுவல்களை மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ளார்.
இறைவனிடம் சிவனடியார்கள் எந்நிலையில் அவனிடம் வருகிறார்கள் என்பது குறித்தும், அவன் அவர்களுக்கு எவ்விதம் எல்லாம் அருளுகிறான் என்பது குறித்தும், அதே போல், அடியும் முடியும் காண இயலாத அவனின் சிறப்புகள் குறித்தும் ”போற்றி! என் வாழ்முதலாகிய பொருளே!” என்ற தொடங்கும் இந்த பாடல் மாணிக்கவாசகர் கூறி இருக்கிறார்.



