திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூட்டிய திருச்சி மாநாட்டின் போது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப் படுகிறது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கடசியின் சார்பில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் ஜன. 28 திங்கள் கிழமை அன்று, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது இதில் இமக தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் அர்ஜூன் சம்பத்.