கோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அதிபர் மைதரீபால சிறீசேனவின் சகோதரர் பிரியந்த சிறீசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் ஒரு நபரால் கோடாலியால் வெட்டப்பட்டார் பிரியந்த சிறிசேன. படுகாயமடைந்த அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு நாளைதான் திரும்புகிறார். இதனால் நாளை மறுநாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறீசேனவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்த சிறீசேனவைத் தாக்கிவிட்டு, பின்னர் சரணடைந்த நபரை ஏப்ரல் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெட்டப்பட்ட இலங்கை அதிபரின் சகோதரர் பிரியந்த சிறீசேன மரணம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari