பாகிஸ்தான் பாப் பாடகி பச்சாதாபத்தை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். என் பாவங்களை அல்லா மன்னிப்பாராக என்று கூறி கதறியிருக்கிறார்.
வினோத பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு குட் பை சொல்லிவிட்டேன் என்றும், பாகிஸ்தான் பாப் பாடகி ரபீ பிர்ஜாதா கூறியுள்ளார். மேலும், ஆட்ட பாட்டங்களுக்கு முடிவு கட்டி விட்டதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அவருடைய நிர்வாண படங்களும் வீடியோக்களும் இன்டர்நெட்டில் வைரல் ஆனதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது.
“என் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பாராக! என் விஷயத்தில் மக்களின் மனம் இளகும்படி செய்வாராக!” என்று டுவிட்டரில் வருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரித்து சமீபத்தில் அவர் மலைப்பாம்பு, முதலைகளோடு வீடியோவும் இடுப்பைச் சுற்றி பாம்களை கட்டிக் கொண்டு போட்டோக்களும் வெளியிட்டு இருந்தார்.
அவை மோடியை கடித்துக் குதறட்டும் என்றும் தற்கொலை பாம்கள் தாக்குதல் நடத்தட்டும் என்றும் வாயில் வந்தபடி வசைபாடி இருந்தார்.