குடைமிளகாய்க்குள் உயிரோடு தவளை இருப்பதைப் பார்த்து அலறிவிட்டார் அதனை நறுக்கியவர். இரவு டின்னருக்கு சமைப்பதற்காக குடைமிளகாயை அரிந்தபோது உயிரோடு ஒரு தவளையை கண்டு அந்த அம்மா பயத்தில் அலறினார். அதை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு விடவே, இதைக் குறித்து பலவித கமெண்டுகள் வந்து குவிந்தன .
கனடாவில் இருந்த ஒரு தம்பதி இரவு உணவுக்காக பச்சை குடமிளகாயை வெட்டியபோது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதைக் கண்டு அவர்கள் வாயடைத்துப் போனார்கள். அந்த குடைமிளகாய்க்குள் இருந்து ஒரு தவளை அவர்களை முறைத்துப் பார்த்தது.
இது பிப்ரவரி 9ஆம் தேதி காக்னோன் என்ற பெண்மணியின் வீட்டில் நடந்தது. இந்த தம்பதிகள் கனடாவில் க்யூபெக் என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள் . அது குறித்து அவர்கள் சமூக வலைதளத்தில் எழுதிவிட்டார்கள். அந்த தவளையை பச்சைமரத் தவளை என்று குறிப்பிட்டார்கள். அது ஒரு அதிசயமாக மிஸ்ட்ரியாக குறிப்பிட்டார்கள்.
நம் ஊரில் பாட்டிகள் ஒரு கதை சொல்வது வழக்கம். குழந்தைகளுக்காக பள்ளியில் இருந்து வந்ததும் தின்பதற்கு அம்மா கொழுக்கட்டை பண்ணி வைத்து இருந்தாள் .
அக்கா சிறுமி தங்கைக்கான கொழுக்கட்டையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு ஒரு தவளையை பிடித்து அந்த பாத்திரத்தில் போட்டு விட்டுப் போய் விட்டாள். தங்கையான அந்த சிறுமி பள்ளியில் இருந்து வந்தபின் பாத்திரத்தை திறந்து பார்த்து அதிர்ந்து போனாள்.
அம்மா !அம்மா! கொழுக்கட்டைக்கு கண்ணு உண்டோம்மா? அம்மா! அம்மா! கொழுக்கட்டைக்கு காலு உண்டோம்மா? என்று கேட்டதாகவும் தாயார் கோபித்துக் கொண்டதாகவும் கதை செல்லும். இதைப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.