
கொரோனா கொள்ளை நோயிலிருந்து குணமடைந்துவரும் ஆண்களின் விந்தில் கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது, உடலுறவு மூலம் கொரோனா கிருமி பரவும் சாத்தியம் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுமார் 38 ஆண் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 16 விழுக்காட்டினரின் விந்தில் கிருமித் தடயங்கள் தென்பட்டன. Shangqiu மருத்துவமனையின் ஆய்வாளர்கள் அதனைத் தெரிவித்தனர். ஆண்களின் இனப்பெருக்க முறையில் கிருமிகள் பல்கிப் பெருகமுடியாது என்றபோதும், விதைப் பைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், கிருமிகள் அங்கு தங்கியிருக்கக் கூடுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கொரோனா மட்டுமின்றி, நோயாளிகள் குணமடைந்த சில மாதங்களுக்குப் பின்னர், Ebola, Zika போன்ற கிருமிகளும்கூட விந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனா உடலுறவு மூலம் பரவுகிறதா என்பது உறுதிசெய்யப்படவில்லை