அரையிறுதியில் இந்திய அணி: 109 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

உலகம்

india-wonமெல்பர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வங்க தேச அணியை இந்திய அணி 109 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றி, இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியான 7 வது வெற்றி என்பது மட்டுமல்ல, 7 முறையும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம், இந்திய கேப்டன் தோனி, அணியை வழிநடத்தி தனது 100வது ஒரு நாள் வெற்றியைப் பெற்றுள்ளார். முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், ரோஹித் சர்மாவின் 137 ரன்னும், ரெய்னாவின் 65 ரன்னும்தான். பின்னர் 303 ரன் என்ற இலக்கைக் கொண்டு விளையாடத் தொடங்கிய வங்க தேச அணி, 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன் எடுத்தது. தமிம் இக்பால் 25 ரன்னும் சர்கார் 29, சபிர் ரஹ்மான் 30 ரன்னும் நஸில் ஹுசைன் 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து வங்க தேச அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். நாளை ஆஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இந்திய அணியுடன் அரை இறுதிப் போட்டியில் மோதும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.