தெற்கு பிரான்சில் 148 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது

Published:

german-airways
ஜெர்மன் விங்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று, தெற்கு பிரான்சில் பிராஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் 148 பேருடன் விழுந்து நொறுங்கியது என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, இன்று பிரான்ஸ் அதிபர் ப்ராங்கோய் ஹோலண்ட், இது குறித்துக் கூறுகையில், அது மிகவும் உள்ளடங்கிய பகுதி, அதில் சிலர் உயிருடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார். france-aircraftபார்சிலோனாவில் இருந்து, டுச்செல்டோர்ப் நோக்கிச் சென்றது அந்த விமானம். அது, தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாம். ஏர்-பஸ் ரக விமானத்தில் 142 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பான விரிவான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இது அடர்ந்த மலைப் பகுதி என்பதால், மீட்புப் பணியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஏ320 ரக விமானத்தில் 150ல் இருந்து 180 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். இந்த விபத்து குறித்து தகவல் வந்தது என்றாலும், முழுத் தகவலும் கிடைக்கவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்த தகவல்களை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது….  

 

 

 

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img