கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பெருவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு எச்சரிக்கையும் தண்டனையும் வழங்கிவருகின்றனர்.
ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி கோவிட் தடையுத்தரவை மீறிய பெண்ணுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டார். கோவிட் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தன்னை முத்தமிடுவதே அபராதம் என்று அவர் புரிந்துக் கொண்டாரா என சமூக ஊடகங்களில் அந்த காட்சிகள் வைரலாகின்றன.
இப்போது வைரலாகிவிட்ட ஒரு சி.சி.டி.வி வீடியோ காட்சியில், லிமாவில் COVID ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க அந்த அதிகாரி தடுத்து நிறுத்தியதைக் காணலாம். தடையை மீறியதற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்த போலீஸ்காரர் கண்டிப்பாக இருப்பதும் இந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.
சி.சி.டி.வி காட்சிகளில் அந்த போலீஸ் அதிகாரி, தடையை மீறிய பெண்ணை நெருங்கி, உதட்டோடு உதடு வைத்து முத்தம் இடுவது தெளிவாகத் தெரிகிறது.
அபராதம் வசூலிக்கும் அதிகாரி, அந்தப் பெண் அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைக் காணலாம்,
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற இந்த வித்தியாசமான ‘கோவிட் தண்டனை’ தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அதிகாரி தற்காலிகமாக தனது வேலையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.