
அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உலகில் ஹில்ஸ்பாரோ கவுண்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரோனால் ஜான்சன் என்ற 45 வயதுடைய நபர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
இவர் பள்ளிப் பேருந்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர்.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறியுள்ளதாவது, பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் நம்பிக்கை வைத்து தான் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.
ஆனால் இதுபோன்ற நபர்கள் மோசமாக நடந்துகொள்வதால் அவர்களின் நம்பிக்கை உடைக்கப்படுகிறது. மேலும் அந்த மாணவி மிகவும் தைரியமாக முன்வந்து தனக்கு நேர்ந்ததை கூறியது பாராட்டுக்குரியது. இதனால் ஜான்சனுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படம் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.