
இந்தியர்கள் கொரோனா பிடியில் இருந்து மீள வேண்டுமென இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றன.
இதில் இஸ்ரேல் சார்பில் ஆக்சிஜன் கருவிகள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியர்கள் கொரோனா நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டுமென இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா பிடியில் இருந்து இந்திய மக்கள் நிவாரணம் பெற வேண்டுமென நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஒரு இடத்தில் கூடி ‘ஓம் நமச்சிவாய’ என சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இஸ்ரேலிகளுக்கும், இந்தியாவுக்கும் ஆன்மீக ரீதியான தொடர்பு உண்டு. வழக்கமாக ஏராளமான இஸ்ரேலிகள் அமைதியை தேடி இந்தியாவில் இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்மீக பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.