பெண்கள் போல் வேடமிட்டு ஆபாச இணையத்தில் பணம் பறிப்பு!

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
china2
china2

சீனாவில் ஆண்களே பெண்கள் போன்ற போலி மார்பகங்களை வைத்துக் கொண்டு, இணையத்தில் பல ஆண்களை ஏமாற்றி 2 மில்லியனுக்கும் அதிகமாக பணம் பறித்தது அம்பலம்.

சீனாவில் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் இருக்கும் காவல்துறை வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இது ஒரு எச்சரிக்கை பதிவு என குறிப்பிட்டுள்ளது.

அதில், “தனிமையில் இருக்கும் ஆண்கள் பலரும் இணையத்தில் மூழ்கி வருவதால் அவர்களை ஈர்க்கும் வகையில் வெய்போ ஆப் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதில், நிர்வாண போட்டோக்கள், பெண்கள் பணத்திற்காக ஆபசமாக நடந்து கொள்வது, அதற்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு பணம் போய் சேரும்” என்று அந்த ஆப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆண்களே, பெண் போன்ற முகமூடி அணிந்து கொண்டு, புரோஸ்டெடிக் மார்பகங்கள் என்ற போலி மார்பகங்களை அணிந்து ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

china
china

இதனை நிரூபிக்கும் வகையில், வீடியோ ஒன்றை காவல்துறையினர் வெளியிட்டுள்ளது. அதில் ஆண், அப்படியே பெண் போன்று நடிக்கிறார். அவர் அணிந்திருக்கும் உடைக்கும் கீழே மார்பகங்கள் விலகுவதை பார்க்க முடிகிறது.

china 1
china 1

இதனையடுத்து காவல்துறையினர், நடத்திய விசாரணையில் 10 தனித்தனி பிளாக் மெயில் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், இணையதளம் மூலம் இந்த கும்பல்கள் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தை மிரட்டி வாங்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.